முதலிரவு அன்று மணமகனை கடைக்கு அனுப்பி விட்டு மாயமாகிய மணமகள்!

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான அன்றே தனக்கு வயிற்றுவலி இருப்பதாக கூறி கணவனை கடைக்கு அனுப்பி விட்டு மணமகள் மாயம்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஆண்களுக்கு சிலர் மணப்பெண் பிடித்து தருவதாக கூறி விருப்பம் இல்லாத பெண்களை பணத்திற்காக பிடித்துக் கொடுத்து விட்டு பணத்தை வாங்கி விட்டு அவர்கள் சென்று விடுகிறார்கள். ஆனால் அந்தப் பெண்கள் அந்த திருமணத்தில் விருப்பமில்லாவிட்டால் உடனடியாக அந்த ஆணை விட்டு ஓடி விடுகிறார்கள். இறுதியில் பாதிக்கப்படுவது பணம் கொடுத்து ஏமாந்த ஆண்கள் தான். இதுபோன்ற சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் கோட்வாலி  என்னும் பகுதியில் உள்ள மனோஜ் என்பவர் 35 ஆயிரம் ரூபாய் கொடுத்து தனக்கு ஒரு மணமகள் வேண்டும் என ஒரு புரோக்கரிடம் கேட்டுள்ளார்.

அவரும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி விட்டு ஒரு பெண்ணை மனோஜுக்கு  காண்பித்துள்ளார். அந்த பெண்மணியும் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார். ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன் திருமணம் நடந்து இவர்கள் இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு நடைபெற்றுள்ளது. அன்று இரவே தனக்கு உடல்நிலை சரியில்லை வயிறு வலிக்கிறது என அந்தப் பெண்மணி கூறியுள்ளார். எனவே மனோஜ் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட சூடு என நினைத்து லேசாக வெளியில் நடந்து விட்டு வா என கூறி உள்ளார். இந்தப் பெண்மணியும் வெளியில் நடந்து விட்டு வந்து இன்னும் எனக்கு சரியாகவில்லை, கடைக்குச் சென்று மாத்திரை வாங்கி வா என கூறியுள்ளார்.

எனவே மருந்து வாங்குவதற்காக மனோஜ் கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது அவரது மனைவி வீட்டில் இல்லை. எங்கு சுற்றிப் பார்த்தாலும் அவரை காணவில்லை. தன்னை கடைக்கு அனுப்பி விட்டு அவரது மனைவி எங்கேயோ சென்று விட்டார் என்பது மனோஜுக்கு தெரிந்துவிட்டது. திருமண விருந்துக்கு வந்திருந்த அனைவரும் இது குறித்து பதறி வந்த நிலையில் மனோஜ் எனது மனைவி திரும்பி வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளாராம்.

author avatar
Rebekal