சென்னை காசிமேட்டில் கடலுக்கு சென்ற 10 மீனவர்கள் மாயம்..!

சென்னை காசிமேட்டில் கடலுக்கு சென்ற 10 மீனவர்கள் மாயம்..!

காசிமேட்டில் 20 நாட்கள் கடந்தும் இதுவரை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை.

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தேசப்பன் , கண்ணன் , முருகன் , சிவகுமார், பார்த்திபன், பாபு, லட்சுமணன், ரகு உள்ளிட்ட 10 மீனவர்கள் தங்களுக்கு தேவையான 7 நாட்களுக்கு உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில் 20 நாட்கள் கடந்தும் இதுவரை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் காசிமேடு மீன் துறை உதவி இயக்குனர் வேலன் என்பவரிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இதனை தொடர்ந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற சென்னை மீனவர்களை கண்டுபிடிக்க புதுச்சேரி ஒடிசா மற்றும் ஆந்திரா அந்தமான் பகுதியில் உள்ள காவல் படையினர் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடி வருகின்றனர்.

Latest Posts

49 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி ..!
ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி..!
ரோஹித் அதிரடி.. 195 ரன்கள் குவித்த மும்பை ..!
#BREAKING: மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி காலமானர்.!
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 5,376 பேருக்கு கொரோனா உறுதி.!
அசாம் போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வு குறித்து முதல்வர் சர்பானந்தா சோனோவால் விளக்கம்.!
வேளாண் மசோதாக்கள் -குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த குலாம் நபி ஆசாத்
தீபிகா படுகோன் 25 ஆம் தேதி ஆஜராக சம்மன்..!
#IPL2020 : டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச முடிவு
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை..!