, ,

பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்.! – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

By

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விற்கும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வன பாதுகாப்பு குறித்த வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஸ் குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கு விசாரணையின் போது, மலைகள் அடங்கிய சுற்றுலா பகுதிகளில் பிளாஸ்டிக் தடை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், இன்னும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

மேலும், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்கும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உயநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கொடைக்கானல் செல்லும் பேருந்து மற்றும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்ய வேண்டும் எனவும், அதனை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Dinasuvadu Media @2023