நாசா இந்திய-அமெரிக்கரான ஏசி சரனியாவை தலைமை தொழில்நுட்ப வல்லுநராக நியமிப்பு.!

நாசா, இந்திய-அமெரிக்கரான ஏசி சரனியாவை தலைமை தொழில்நுட்ப வல்லுநராக நியமித்துள்ளது.

இந்திய-அமெரிக்க விண்வெளி துறை நிபுணரான ஏசி சரனியா, நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி-3 வரை செயல் தலைமை தொழில்நுட்ப வல்லுநராக இருந்த சக இந்திய-அமெரிக்கன் பவ்யா லாலுக்கு பதிலாக தற்போது தலைமை தொழில்நுட்ப வல்லுநராக சரனியா, நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏசி சரனியா, ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். எமோரி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசாவில் சேர்வதற்கு முன்பு, சரனியா ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார். மேலும் அவர் ப்ளூ ஆரிஜினுடன் பணிபுரிந்திருக்கிறார், மற்றும் ப்ளூ மூன் லூனார் லேண்டர் திட்டம் மற்றும் நாசாவுடன் பல தொழில்நுட்ப முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

Leave a Comment