பில்லா கெட்டப்பில் தல அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

அஜித் கோட் சூட் அணிந்த லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி  வருகிறது.

தமிழ் சினிவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் 20-ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

அங்கு படப்பிடிப்பு 5 நாட்களுக்கு மேலாக நடைபெறவுள்ளது. அதன்பிறகு படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. அதைபோல் அஜித்தின் 61 – வது படம் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் பரவி தான் வருகிறது. வலிமை முடிந்தவுடன் அஜித் தனது 61 வது படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில், அஜித் கோட் சூட் அணிந்து ரசிகருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்கள் டேவிட் பில்லா இஸ் பேக் என்று கூறிவருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.