மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா இல்லை – மருத்துவமனை

மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் எஸ்.பி.பியின் உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறப்பட்டது. இந்நிலையில், 50 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று காலமானார்.

இந்நிலையில், மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவருக்கு கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி பரிசோதனை செய்ததில் நெகடிவ் என்று வந்தது. ஆனால் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக இன்று காலமானார் எனவும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எஸ்.பி.பி உடல் நாளை காலை வரை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும். மருத்துவமனையில் இருந்து எஸ்.பி.பி உடல் இன்று மாலை 4:30 மணிக்கு வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்