அதி தீவிர புயலான ஃபானி புயலின் வலு குறைந்தது!

அதி தீவிர புயலான ஃபானி புயல், ஒடிசாவில் பூரி பகுதியில் இன்று காலை 8 மணி முதல் 11 மணிக்குள்ளாக கரையை கடந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், அப்பகுதியில் வசித்த மக்களும் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், அதி தீவிர புயலான ஃபானி புயல் தற்போது வலு குறைந்து, புவேனேஷ்வர் – கட்டாக் இடையே தீவிர புயலாக நகர்கிறது. புயல் நகரும் பகுதிகளில் தற்போது காற்று 150 முதல் 160 கிமீ வேகத்தில் வீசுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment