திடீரென தேதி மாற்றப்பட்ட கலைஞர் கோட்டம் திறப்பு விழா.! காரணம் இதுதானா.?

0
362
Kalaignar Karunanidhi
Kalaignar Karunanidhi [Image source : Mint]

திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவானது ஜூன் 3இல் இருந்து ஜூன் 15க்கு மாற்றப்பட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக அவரது சொந்த ஊரான திருவாரூரில், கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டமானது 7000 ஏக்கரில் 12 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் இறுதி கட்ட பணிகள் முடிந்து கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3இல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்று மாலை தேசிய அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது மழை அதிகளவில் பெய்ததால், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மழைநீரால் சேதமடைந்து உள்ளதால் அதனை சரிப்படுத்தி மேடை அமைக்க காலதாமதம் ஆகும் என்பதால் திறப்பு விழாவானது ஜூன் 3இல் இருந்து ஜூன் 15க்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஸ் குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வரவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.