எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி ! மாநிலங்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில்  பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்தார்.நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்   2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் , அதனை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்க மறுத்தார்.இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.