இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள்..?

இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் சென்னையில் அதிகம் வசூல் செய்த 5 படங்களின் பட்டியல்.

கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடி இணையத்தளத்தில் வெளியானது. அதற்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் திறக்கப்பட்டு சில படங்கள் வெளியானது, வெளியானதில் ஒரு திரைப்படம் கூட நல்ல வசூல் கொடுக்கவில்லை. அதற்கு பிறகு மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களுக்கும் சினிமா திரைக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது என்ற கூறலாம். இந்த படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகதஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்தது இதனால் விஜய்யை வசூல் சர்க்ரவர்த்தி என்று அழைத்தனர்.

master 1

மேலும் மாஸ்டர் படம் வெளியானதை தொடர்ந்து, சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது. இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில ஒரு கலவையான விமர்சனத்தையும் பெற்றது. அதற்கு பிறகு திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு களத்தில் சந்திபோம், கபடதாரி, பாரிஸ் ஜெயராஜ், நானும் சிங்கிள் தான், சக்ரா, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் வெளியானது.

இந்த நிலையில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் சென்னையில் முதல் நாளாக அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் இதில் முதலிடத்தில் விஜயின் மாஸ்டர் படம் 1.21 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் நெஞ்சம் மறப்பதில்லை 34 லட்சம் வசூலிலும், மூன்றாவது இடத்தில் சக்ரா திரைப்படம் 31 லட்சமும் ஈஸ்வரன் திரைப்படம் 20 லட்சமும் பாரிஸ் ஜெயராஜ் படம் 15 லட்சமும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.