தமிழ்நாடு எட்ட வேண்டிய உயரம் இமயமலைக்கு இணையானது – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு எட்ட வேண்டிய உயரம் இமயமலைக்கு இணையானது. ஆனால், அதற்குரிய திறனில் பாதியைக் கூட எட்ட முடியவில்லை என அன்புமணி ராமதாஸ் ட்வீட். 

பாட்டாளி மக்கள் கட்சி 34-ஆவது தொடக்க விழாவைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘பாட்டாளி மக்கள் கட்சி 34-ஆவது தொடக்க விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் கட்சியின் வளர்ச்சிக்காக எந்த எதிர்பார்ப்புமின்றி உழைத்து வரும் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்!

தமிழ்நாடு எட்ட வேண்டிய உயரம் இமயமலைக்கு இணையானது. ஆனால், அதற்குரிய திறனில் பாதியைக் கூட எட்ட முடியவில்லை. அதற்கான தடைகளை களைந்து தமிழ்நாட்டை அதற்குரிய உயரத்திற்கு முன்னேற்ற வேண்டிய நமது கடமை. அதற்கான பொறுப்பை அடைவதற்காக உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment