தமிழகத்திற்கு அமித்ஷா வருகை.. இந்திய அளவில் டிரெண்டாகும் #GoBackAmitShah ஹாஷ்டேக்.!

தமிழகம் வரும் அமித்ஷாவிற்கு எதிராக டுவிட்டரில் #GoBackAmitShah என்ற டிரெண்டிங்காகி வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா 2-வது நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்தில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக அடிக்கல் நாட்ட வரும் அமித்ஷாவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் சம்பத் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

மேலும், அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் இன்று இரவு ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தர்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருவதற்கு எதிராக டுவிட்டரில் #GoBackAmitShah என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்காகி வருகிறது.

அந்த ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்காகி தமிழகத்தில் 3-வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி தமிழகம் வந்த போது #GoBackmodi என்ற ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்காகியது குறிப்பிடத்தக்கது.