சி.டி.ரவியுடன் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் சந்திப்பு..!

தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் சந்திப்பு.

தலைமைக்கு எதிராக பேசியதாக கூறி கே.பி இராமலிங்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியை சந்தித்துள்ளார். இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரும் நிலையில் அவரையும் சந்திக்க உள்ள நிலையில்,  தற்போது பாஜக பொறுப்பாளர் இராமலிங்கம் சந்தித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் கேபி ராமலிங்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா காலகட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனவை சிறப்பாக கையாண்டு வருகிறது.

144 தடை உள்ளபோது அனைத்து கட்சி கூட்டம்  தேவையில்லை என கருத்து தெரிவித்தார். இதனால்,  எம்.பி. கே.பி.ராமலிங்கம் திமுக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு எந்த ஒரு கட்சியிலும் சேராமல் இருந்த நிலையில் இன்று மாலை அமித்ஷாவை சந்திக்க உள்ளார்.

author avatar
murugan