கடந்த 28 மணி நேரமாக உரிய உத்தரவின்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு என்னை சிறைவைத்துள்ளது – பிரியங்கா காந்தி

பிரதமர் அவர்களே…உங்கள் அரசு என்னை கடந்த 28 மணி நேரமாக எந்த உத்தரவோ, வழக்குப் பதிவோ இல்லாமல் தடுத்துவைத்துள்ளது என பிரியங்கா காந்தி ட்வீட். 

உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் அவர்களே…உங்கள் அரசு என்னை கடந்த 28 மணி நேரமாக எந்த உத்தரவோ, வழக்குப் பதிவோ இல்லாமல் தடுத்துவைத்துள்ளது என பதிவிட்டு, விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்த வீடியோவை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.