சர்ச்சை படங்களை உருவாக்கிய ஜெமினி AI சாட்பாட் ..!  தற்காலிகமாக நிறுத்தியது கூகுள் நிறுவனம் ..!

தகவல் தொழில்நுட்ப உலகில் தற்போது படுவேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence). இந்த AI தொழில்நுட்ப உலகில் அடுத்தடுத்த புதுபுது அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதில் முக்கியத்துவம் பெற்று ஆரம்ப நிலையில் இருந்து வருவதே இந்த ஜெமினி AI சாட்பாட்.

பிப்ரவரி 8 அன்று கூகுள் அதன் புதுப்பிக்கப்பட்ட ஜெமினியை உலகின் சில பகுதிகளில் வெளியிட்டது. அதை தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில் சில பயனர்கள் சமூக ஊடகங்களில் சில ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டனர் அந்த ஸ்க்ரீன் சாட்டில், ஜெமினி சாட்பாட்  இன வேறுபாடுகளுடன் வெள்ளை நிறத்தை ஆதிக்கம் செலுத்தும் படங்களை தவறாக சித்தரித்திருந்தது.

Read More :- AI தொழில்நுட்பத்தின் அட்டகாசமான பரிமாணம்.! Sora நிகழ்த்தும் அதிசய காட்சிகள்… 

உதாரணமாக :-  நாஜி காலத்தில் உள்ள துருப்புகளை வேறொரு இனத்தவரின் துருப்புகளாக சித்தரித்து காட்டியது.

கணினியால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் என்பதால் AI நிறுவனம் இதன் மூலம் இன ரீதியான சண்டைகளை உருவாக்குகிறதா ? என்ற சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு தீர்வாக நேற்றைய நாள் வியாழக்கிழமை அன்று கூகுள் நிறுவனம், “ஜெமினி, வரலாற்று துருப்புகளை தவறாக சித்தரித்ததை நாங்கள் அறிவோம். அதற்காக மன்னிப்பும் கேட்கிறோம். இது முழுவதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வடிவைக்கபட்டதே ஆகும்.

Read More :- அடடா! இந்த பட்ஜெட்டில் இந்த ‘Moto G04’ போன் செம வொர்த்! முழு விவரம் இதோ!

ஜெமினியின் இமேஜ் ஜெனரேஷன் தொழில்நுட்பத்தின் சமீபத்திய சிக்கல்களைத் தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாங்கள் இதை சரிசெய்து முடிக்கும் வரை, மக்களின் படத்தை உருவாக்கும் இந்த தொழில்நுட்பத்தை நிறுத்தப் போகிறோம். இதை சரி செய்து விரைவில் மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியிடுவோம். மேலும், இந்த வகையான சித்தரிப்புகளை உடனடியாக மேம்படுத்த நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.

ஜெமினியின் AI பட உருவாக்கம் பலதரப்பட்ட மக்களுக்கு நல்ல விதமாக உதவுகிறது. பொதுவாக இது ஒரு நல்ல விஷயம்.  ஆனால், தற்போது, அது சற்று தவறாகிவிட்டது”, என்று கூகுள் நிறுவனம் அவர்களது X வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment