எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண்..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!

வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முத்தமிழ்ச்செல்வி என்ற பெண்ணிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி என்ற பெண் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய வேண்டும் என்று ஆசை கொண்ட இவர் அதற்கு நிதி தேவைப்பட்ட காரணத்தினால் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அவரது பயணத்துக்கு கழக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.25 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி இருந்தது. இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை உச்சியை அடைய தனது பயணத்தைத் தொடங்கிய முத்தமிழ்செல்வி எவரெஸ்ட்டின் அதிகபட்ச உயரத்தை எட்டி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை முத்தமிழ்ச்செல்வி பெற்றுள்ளார். இவரது சாதனைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள். அவரது சாதனை பயணங்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.