பெண்களின் கவனத்திற்கு..! மாதவிடாய் சமயத்தில் என்ன சாப்பிட வேண்டும்..? எதெல்லாம் சாப்பிடக்கூடாது..?

மாதவிடாய் சமயங்களில் என்னென்ன உணவுகள்  சாப்பிடலாம்,சாப்பிடக் கூடாது என்பது பற்றி பார்ப்போம். 

பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் சமயங்களில் பல்வேறு விதமான உடல் ரீதியான பிரச்சனைகளை மேற்கொள்வதுண்டு. மாதவிடாய் சமயங்களில் கை கால் வலி, முதுகு வலி, வயிற்றில் வலி போன்ற பிரச்சனைகள் பொதுவாக ஏற்படும். இதனால் பெண்கள் அந்த சமயங்களில் மிகவும் சோர்வாக இருப்பதுண்டு.

PERIODS
PERIODS iMAGESOURCE representative

இருப்பினும், மாதவிடாய் சமயங்களில் பெண்கள் என்னென்ன உணவை சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் என்னென்ன உணவுகள்  சாப்பிடலாம்,சாப்பிடக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.

சாப்பிடக் கூடிய உணவுகள் 

மஞ்சள்

turmeric
turmeric Imagesource Timesofindia

மாதவிடாய் சமயங்களில்  உணவில்  சிறிதளவு மஞ்சள் சேர்ப்பது நல்லது. ஏனென்றால், மஞ்சளில் குர்குமின் உள்ளது. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் , இது தசைப்பிடிப்புகளை குணப்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இரும்புச்சத்துள்ள உணவுகள்

iron
ironimagesource reperesentative

 மாதவிடாய் சமயங்களில் பெண்கள் இரும்புச்சத்து நிறைந்த பொருட்களை உண்ணுவது நல்லது. குறிப்பாக, உளுந்து, வெல்லம், பீன்ஸ், கீரை மற்றும் டார்க் சாக்லேட் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலில் இரத்த சோகை பிரச்சனை ஏற்படுவதை  தடுக்கிறது. மேலும் இரத்தம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

வாழைப்பழம் 

banana
banana Imagesource Representative

பொதுவாகவே நாம் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் பெண்கள் மாதவிடாய் சமயங்களில் வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தில் வைட்டமின் 6 மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க இது செயல்படுகிறது. வாழைப்பழத்தை வைத்து ஸ்மூத்திகள்  சாப்பிடலாம்.

மூலிகை தேநீர்

tea
tea Imagesource Timesofindia

மூலிகை டீயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்த டீ குடிப்பதால் மன அழுத்தம் குறைவது மட்டுமின்றி, புத்துணர்ச்சியோடு இருக்க உதவுகிறது. மேலும், இது நமது உடல் உறுப்புகள் ஆரோக்கியமான முறையில் இயங்க உதவுகிறது.

டார்க் சாக்லேட்

dark chocolate
dark chocolate IMagesource representative

டார்க் சாக்லேட்டில் எண்டோர்பின்கள் உள்ளன. இது ஒரு வகையான மகிழ்ச்சியான ஹார்மோன். மகிழ்ச்சியான ஹார்மோன் உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள் 

சர்க்கரை

மாதவிடாய் சமயங்களில் அதிக சர்க்கரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இந்த சமயங்களில் ஐஸ்கிரீம், மிட்டாய் மற்றும் கேக் போன்றவை அடங்கும்.

பாஸ்ட்புட் உணவுகள் 

fastfood
fastfood Imagesource Representative

இன்று அதிகாமாக நாம் விரும்பி உண்ணக் கூடிய பாஸ்ட்புட் உணவுகள் நமது உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ஒன்றாகும். எனவே இந்த உணவுகளை தவிர்த்து வீட்டில் செய்யக் கூடிய உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதே போல் நொறுக்குத்தீனி உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த உணவுகள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

உப்பு அதிகமான உணவுகள் 

lays
lays Image source representative

பொதுவாகவே நாம் உணவு உட்கொள்ளும் போது உணவில் குறைவான அளவு உப்பை சேர்த்துக் கொள்வது நல்லது. கடைகளில் விற்கக்கூடிய உப்பு அதிகமாக உள்ள பொறிகள் போன்ற உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.