மிரட்டல் பீட்! ஆட்டம் போட வைக்கும் ‘கோட்’ பட பாடல் இதோ!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தா  கோட்.படத்தில் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மாளவிகா சர்மா, மோகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதல் பாடல் அதாவது விசில் போடு என்று தொடங்கும் அந்த பாடல் இன்று 6 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது படத்திற்கான பாடல் வெளியாகி இருக்கிறது.

இந்த பாடலை பிரபல பாடலாசிரியரான மதன் கார்க்கி எழுதியுள்ளார். பாடலை நடிகர் விஜய் தனது சொந்த குரலில் யுவன் இசையில் பாடி இருக்கிறார். பாடல் மிகவும் அருமையாக இருப்பதன் காரணமாக இந்த பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் இந்த கோட் திரைப்படத்திற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது மூலமாக நடைபெற்று வருகிறது. படம் வருகின்ற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.