வாரத்தின் முதல் நாள்… சரிவுடன் முடிந்த இந்திய பங்குசந்தை.! 

இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் என்பது இந்திய நாட்டின் பொருளாதாரம், உள்நாட்டு வர்த்தகத்தை கொண்டு மட்டும் நிர்ணயம் செய்யப்படுவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை வர்த்தக உலகமும் இந்திய பங்குசந்தையில் முக்கிய மாற்றங்களை, தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.   இன்றைய உள்நாட்டு பங்குச்சந்தை நிஃப்டி 50யின் புள்ளிகள் குறைவுக்கு, சர்வதேச வர்த்தக நிலவரமும், வங்கிகளின் நிதி நிலைமையும் முக்கிய காரணமாக அமைந்து விட்டன.

இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!

முதலீட்டாளர்கள் செவ்வாயன்று வெளியாகும் அமெரிக்க பணவீக்க தரவு, பிரிட்டிஷ் பணவீக்க தரவு மற்றும் புதன்கிழமை வெளியாகும் ஐரோப்பிய  ஜிடிபி ஆகியவற்றிற்காக காத்திருந்ததால் இந்திய பங்குசந்தையில் முதலீட்டாளர்கள் கவனம் சற்று திரும்பாமல் இருந்ததால வார முதல் நாள் இந்திய பங்குசந்தை சரிவை சந்தித்துள்ளது.

இதனால், இன்றைய பங்குச்சந்தை முடிவில் நிஃப்டி 50யானது 166 புள்ளிகள் குறைந்து 21,616.05 ஆகவும், சென்செக்ஸ் 523 புள்ளிகள் சரிந்து 71,072.49 ஆகவும் முடிந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றின் பங்குகள் சென்செக்ஸ் குறியீட்டில் டாப் லிஸ்டில் சரிவடைந்து உள்ளன.  சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதனால் மிக பெரிய இழப்பை சந்தித்தன.

இன்று பங்குசந்தையில் (BSE) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை முதலீடு முந்தைய அமர்வில் கிட்டத்தட்ட ரூ.386.4 லட்சம் கோடியிலிருந்தது. அந்த முதலீடு தற்போது கிட்டத்தட்ட ரூ.379 லட்சம் கோடியாக குறைந்துள்ளது,  இன்று ஒரே அமர்வில் ரூ.7.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment