T20 Semifinal : அனல் பறக்கும் அரையிறுதி நியூசிலாந்து vs பாகிஸ்தான் இதுவரை உள்ள வரலாறு !

ஐசிசி டி 20 உலகக் கோப்பையின் பரபரப்பான அரையிறுதியில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது.பிற்பகல் 1.30 க்கு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பையிலும் இரு அணிகளும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தன,அரையிறுதியில் பாகிஸ்ததானும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

இன்று பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணி :

பங்களாதேஷ் அணிக்கு எதிரான பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் ஃபார்முக்கு திரும்ப பாகிஸ்தானின் மிடில் ஆர்டரும் கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக வியாடியதால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இருப்பினும், அவர்களின் தொடக்க ஆட்டக்காரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானின் ஆட்டம் சற்று பின்னடைவை தந்துள்ளது.

நியூசிலாந்து அணி :

நியூசிலாந்தின் பேட்டிங் பிரிவில் கிளென் பிலிப்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.அவர் சூப்பர் 12 ஆட்டத்தில் நான்கு போட்டிகளில் 195 ரன்களை குவித்துள்ளார்.

பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் நான்கு போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, நியூசிலாந்து சில சிறந்த பவர்-ஹிட்டர்களுடன் மிகவும் சமநிலையான அணியாகத் தெரிகிறது.

யாரு டாப் ?

நியூசிலாந்திற்கு எதிராக பாகிஸ்தான் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.இதுவரை இரு அணிகளுக்கும் இடையே 28 முறை டி20 போட்டிகள் நடந்துள்ளது.அதில் பாகிஸ்தான் 17 முறையும் ,நியூசிலாந்து 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேராக 6 முறை சந்தித்துள்ளது இதில் பாகிஸ்தான் 4 மற்றும் நியூசிலாந்து 2 வெற்றிகளை பெற்றுள்ளது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment