சூனியக்காரி என்று கிராம மக்களால் விரட்டப்பட்ட குடும்பம்…! இன்று கிராம மக்களுக்கு உதவிகரம் நீட்டும் அதே குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்..!

  • கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பதாக சூனியக்காரி என்று கூறி கிராமத்தாரால் விரட்டியடிக்கப்பட்ட குடும்பம். 
  • இளம்பெண் சுர்கி, வாடகை வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்று அந்த கிராம மக்களுக்கு உதவி வருகிறார்.

மேற்கு வங்கத்தில், ஒரு கிராமத்தில் வசித்த தாய் மற்றும் மகள்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பதாக சூனியக்காரி என்று கூறி விரட்டியடிக்கப்பட்டனர். இதனையடுத்து, அந்த குடும்பம் வேறு கிராமத்தில் குடிபெயர்ந்தது. இந்நிலையில், தனது சொந்த கிராம மக்கள் கொரோனாவால் உயிரிழப்பதை தாங்க முடியாத அந்த குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் சுர்கி, வாடகை வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்று அந்த கிராம மக்களுக்கு உதவி வருகிறார்.

இதுகுறித்து அப்பெண் கூறுகையில், தனது 10 வயதில் அந்த கிராமத்தினரால், தனது குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமையை நினைவு கூர்ந்தார். பெண் குழந்தைகளை படிக்க வைத்ததால், தனது தாயை சூனியக்காரி என முத்திரை குத்தியதாக கூறியுள்ளார்.

மேலும், கிராமமே கொரோனாவால் மூச்சுத்திணறும்  நிலையில், அவர்கள் செய்த கொடுமைகளை மறந்து, கிராம மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை அளித்து உதவி வருவதற்காக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.