நியாயமான முறையில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.! உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி.!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் வழக்கு ஒன்றை நேற்று தொடுத்து இருந்தார். அதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் எண்ணிகையில் குளறுபடி இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

cvshanmugamelectioncommision

கள்ளஓட்டு அபாயம் : அதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் , இறந்தவர்களின் பெயர்கள்  சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பலரது வாக்காளர்கள் பெயர்கள் இரண்டு முறை உள்ளது என்றும், இதனால் கள்ள ஓட்டு போடும் அபாயம் இருக்கிறது. இதனை தடுத்து நியாயமான முறையில் தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த வழக்கில் கோரிக்க வைக்கப்பட்டு இருந்தது.

தேர்தல் ஆணையம் உறுதி : இது குறித்து வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்து உள்ளது.

தேர்தல் ஆணைய உத்தரவு : இதற்கு முன்னதாக அதிமுக கொடுத்த புகாரின் பெயரில். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுபடி தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்திய பிரதாப் சாகு, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு வாக்காளர் பட்டியல் குறித்து முறையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment