டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகப்பெரும் சவாலாக இருக்கும் – அமெரிக்க தொற்றுநோய் நிபுணர்!

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகப்பெரும் சவாலாக இருக்கக்கூடும் என தொற்று நோய் நிபுணர் அந்தோணி ஃபாசி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஏற்பட்ட கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டு நிலையில், இந்த கொரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா வகை கொரோனா மிக வேகமாக பரவி வந்தது. இந்த வகை வைரஸால்  இந்தியாவில் மூன்றாம் அலை உருவாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உருமாற்றம் அடைந்த இந்த வைரஸ், இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் பரவி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் இந்த டெல்டா வகை வைரஸ் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க புற்றுநோய் மருத்துவர் அந்தோணி ஃபாசி அவர்கள் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா காரணமாக கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என கூறியுள்ளார்.

மேலும், இந்த டெல்டா வகை கொரோனா மிக வேகமாக பரவக்கூடியதுடன் அதிக வீரியம் கொண்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அமெரிக்காவில் செலுத்தப்பட்டு வரக் கூடிய தடுப்பூசிகள் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனாவை எதிர்த்து போராடுவதில் நல்ல செயல்திறன் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுவரை 45 சதவீதம் பேருக்கு மட்டுமே அமெரிக்காவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal