பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்-மத்திய அமைச்சர்

மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்  கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.பின்னர் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஏற்கனவே இந்தியாவில் உள்ள  அனைத்து  மாநிலங்களில் உள்ள  பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் என பலவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொக்ரியால் கொரோனா பாதிப்பை பொறுத்து ஏப்ரல்  14-ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கு முடிந்ததும் நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்த திட்டம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.