Nepal Earthquake

நேபாள நிலநடுக்கம்.! பலி எண்ணிக்கை 128ஆக உயர்வு.! 

By

நேபாளம் தலைநகர் காத்மண்டில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில், லாமிடாண்டா பகுதியை மையமாக கொண்டு  6.4 என்ற ரிக்டர் அளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுமார் 15 நிமிடங்கள் வரையில் ஏற்பட்டது.

   
   

இதில் ஜாஜர்கோட் , ருகும் மாவட்டங்களில் கட்டிடங்கள் சரிந்தன. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஜாஜர்கோட் மாவட்டத்தில் 34 பேரும், ருகும் மாவட்டத்தில் 35 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் காணாமல் போயிருந்த காரணத்தால் உயிரிழப்புகள் மேலும் உயரக்கூடும் என கூறப்பட்டு இருந்தது.

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 69 பேர் உயிரிழப்பு.!

மீட்புப்பணிகளில், மீட்புபடையினர் உடன், நேபாள ராணுவம், காவல்துறை பொதுமக்களால் ஆகியோர் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் இதுவரை நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128ஆக உயர்த்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெய்லேக், சல்யான் மற்றும் ரோல்பா ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இருந்தும், பல்வேறு இடங்களில் தொடர்புகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி, பீகார் போன்ற இந்திய பகுதிகளிலும் நேபாள நிலநடுக்கம் உணரப்பட்டு இருந்தாலும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023