சீனாவில் நிலநடுக்கம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீனாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. ஏற்கனவே, 113 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131-ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணங்களான கன்சு, கிங்கா ஆகியவற்றில் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பல பொருட் சேதங்கள் மற்றும் உயிர்சேதங்களையும் ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் லட்சக்கணக்கான வீடுகள் பயங்கரமாக சேதம் அடைந்தது. அது மட்டுமின்றி நிலநடுக்கம் கிராமப்புற சாலைகளை சேதப்படுத்த மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு செயலிழப்புகளுக்கு வழிவகுத்தது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 113 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தகவலின் படி உயிரிழப்பு எண்ணிக்கை 131-ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட கன்சு, கிங்கா ஆகிய இரு மாகாணங்களிலும் மொத்தம் 7,000 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து எந்தெந்த பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டதோ அந்த இடங்களுக்கு எல்லாம் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தொடங்கினார்கள். நிலநடுக்கம் மட்டுமின்றி சீனாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால்  மக்கள் அவதியில் இருக்கிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.