பண்டைய காலத்து ஈரானியர்களின் குளிரூட்டும் பொறிமுறை…!!

பண்டைய காலத்து ஈரானியர்களின் குளிரூட்டும் பொறிமுறை. இன்று AC என அழைக்கப்படும் Aircondition வசதி பண்டைய ஈரானில் (அத்துடன் ஆப்கானிஸ்தானில்) இருந்துள்ளது. இது குறித்து மார்கோ போலோ தனது பயணக் குறிப்புகளில் எழுதியுள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் மின்சாரத்தில் இயங்கும் குளிரூட்டியை கண்டுபிடித்தனர்.

பண்டைய ஈரானியர்களின் AC பொறிமுறை சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப் பட்டது. ஒரு கட்டிடத்திற்கு மேலே உள்ள கோபுரங்களில் காற்று செல்வதற்கான சாளரங்கள் இருக்கும். அதே நேரம் கட்டிடத்தின் அடிப்பகுதியிலும் காற்று நுழைவதற்கான நிலக்கீழ் சுரங்க வழி இருக்கும். கோபுர சாளரங்கள் ஊடாக வரும் காற்று, தாழ் அமுக்கம் மூலம் கீழே இருந்து வரும் வளியை இழுத்து குளிர் படுத்தும். இதனால் வீட்டுக்குள் எந்த நேரமும் குளிராக இருக்கும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment