நீட் தேர்வு விலக்கு குறித்த வழக்குகள்.! முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் முக்கிய ஆலோசனை.!

நீட் தேர்வு விலக்கு அளிக்க கோரும் தமிழக அரசின் உச்சநீதிமன்ற வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக எழுதப்படும் நீட் நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று தமிழக அரசு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டமானது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதில்,  தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் திமுக திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ, தலைமைச் செயலாளர் இறையன்பு., மருத்துவம் செயலாளர் செந்தில்குமார்,  அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், சட்டத்துறை செயலாளர் கோபி ரவிகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment