மழை இல்லை…5 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை:தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு (டிச. 25 ஆம் தேதி வரை) பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,புதுவை,காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை எச்சரிக்கை:

இன்றும்,நாளையும் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் என்றும்,

கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை ஏதுமில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.