#Breaking:பேனர்களை அகற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுச்சேரியில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என புதுச்சேரி நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்,சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும்,இந்த பேனர்களை அகற்றியது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே,கடந்த மாதம் புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து விழுந்து 70 வயது மூதாட்டி ராஜம்மாள் என்பவர் காயம் அடைந்ததாகவும்,போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,புதுச்சேரிக்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை உடனே அகற்றி,சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்களிடமே,அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என புதுச்சேரி நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.