குட்நியூஸ்..!”இனி ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமம்” – மத்திய அரசு அறிவிப்பு…!

  • ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு புதிய விதிமுறைகளை,மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • அதன்படி,அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமம் பெற்று விடலாம்.

பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முதலில் LLR பதிவு செய்து விட்டு,சம்மந்தப்பட்ட பயிற்சி மையத்தில் குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி பெற்ற பின்னர்,ஆர்.டி.ஓ அதிகாரி முன்பாக வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டும்.அதன் பின்னர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

ஆனால்,உரிமம் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளியில்,பயிற்சி பெற்றால் ஓட்டுநர் பரிசோதனை தேவையில்லை என்ற புதிய விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில்,புதிய விதிமுறைகளை தற்போது பயிற்சி மையங்களுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.அதன்படி,

  • அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமம் பெற்று விடலாம்.
  • இதனால்,இனி ஆர்.டி.ஓ அதிகாரி முன்பாக வாகனத்தை ஓட்டி காட்ட தேவையில்லை.
  • இந்த புதிய விதிகளானது வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

இந்த புதிய நடைமுறையினால் ஓட்டுநர் உரிமம் பெரும் நடைமுறை எளிதாக்கப்படுவதுடன்,2025ம் ஆண்டிற்குள் சாலை விபத்துக்களை 50% வரை குறைக்கும் நோக்கத்திலும் இந்த புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.