அல்வாவுடன் தொடங்கிய பட்ஜெட் மக்களுக்கு அல்வாவுடன் முடிந்தது -கமல்

  • நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  2 மணி 41 நிமிடங்கள் வாசித்தார்.
  • அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது என கமல் பதிவிட்டு உள்ளார்.

நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  2 மணி 41 நிமிடங்கள் வாசித்தார். இந்த பட்ஜெட் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சியின்  தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.

அதில் ,அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை என கமல் பதிவிட்டு உள்ளார்.

author avatar
Dinasuvadu desk