கொரோனா வைரஸ் எதிரொலி! 7000 பயணிகளுடன் கடலில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பல்..!

  • 7000 பயணிகளுடன் கோஸ்டா சமரால்டா எனும் கப்பல் இத்தாலி துறைமுகத்தை வந்தடைந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்ட சீனாவை சேர்ந்த பெண்ணிற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என சந்தேகப்பட்டனர்.
  • இதனால் மருத்துவ பரிசோதனை முடியும் வரை 7000 பயணிகளும் கப்பலிலேயே தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இத்தாலியில் உள்ள சிவிடவேசியாவில் எனும் துறைமுகத்தில் 6000 பயணிகள் உட்பட 1000 பணியாளர்களுடன் கோஸ்டா சமரால்டா என்ற கப்பல், வந்தடைந்தது. இந்த கப்பலில் சீனா, மக்காவு எனும் பகுதியை சேர்ந்த ஜோடிகள் பயணித்தது. அதில், அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டிருக்கோமோ என்ற சந்தேகத்தில் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால் அந்த பெண்ணும், அவரின் கணவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், இத்தாலி அரசு அந்த கப்பலை துறைமுகத்துக்குள் அனுப்ப மறுத்துவிட்டது. இந்நிலையில், அந்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை முடியும் வரை 7000 பயணிகளும் கப்பலிலேயே தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.