பகத்சிங் தூக்கிலிவது தொடர்பாக நாடக ஒத்திகை பார்த்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு…!

பள்ளியில் பகத்சிங் வேடத்தில் நடிக்கவிருந்த சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பகத்சிங் தூக்கிலடப்படும் சமயத்தை நடித்து பார்த்த போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியை சேர்ந்தவர்கள் நாகராஜ்-பாக்கியலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சய் கவுடா என்ற மகன் உள்ளனர் இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில் நாளை தனியார் பள்ளியில் நடக்க உள்ள கன்னட ராஜ்யோத் சபா விழாவில் இவர் பகத்சிங் வேடமடைந்து நடிக்க உள்ளார். இதனை எடுத்து சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிகழ்ச்சிக்கான ஒத்திக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பகத்சிங் தூக்கிலிடும் காட்சியை நடித்து பார்த்துள்ளார். அப்போது அவர் தனது முகத்தை துணியால் மூடி  கழுத்தில் கயிற்றை கட்டி சோபாவில் இருந்து கீழே குதித்துள்ளார். அந்த சமயத்தில் அவரது கழுத்தை கயிறு இறக்கி உள்ளது.

வீட்டில் யாரும் இல்லாததால் அவரை யாரும் காப்பாற்ற இயலவில்லை. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு வந்த பெற்றோர் தனது மகன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து  கதறி அழுதுள்ளனர்.

இதனையடுத்து, பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment