கேரளாவில் வசூல் வேட்டை செய்த பீஸ்ட்.!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி,  போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. படம் தளபதி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாகவே அமைந்தது.

சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் படம் ஒரு கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது என்றே கூறவேண்டும். விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் படம் வசூலில் தாறுமாறாக சாதனை செய்து வருகிறது.

இந்நிலையில், தற்போது விஜய்க்கு அதிகம் ரசிகர்கள் உள்ள கேரளாவில் பீஸ்ட் படம் வெளியான முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பீஸ்ட் வெளியான முதல் நாள் மட்டும் 6.6 கோடி வசூல் செய்துள்ளதாம்.

பீஸ்ட் படம் முதல் நாளில் கேரளாவில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது படம் என்ற சாதனையும் படைத்துள்ளது. முதலிடத்தில் மோகன் லால் நடித்த ஒடியன் படம் உள்ளது. இந்த படம் 6.76 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.