மருத்துவத்தில் தமிழகம் முன்னோடி என மத்திய அரசு விருது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.!

அனைத்து தரப்பு மக்களுக்கும் முறையான மருத்துவம் சென்றவடைவதாக கூறி இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என விருது வழங்கபட்டது. – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டார். அந்த விழாவில் அவர் பேசுகையில் தமிழகத்தின் மருத்துவ சேவை பற்றி பெருமையாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், இந்திய அளவில் மருத்துவத்துறையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழக அரசும் , தமிழக மருத்துவத்துறையும், தனியார் மருத்துவ சேவையும் ஒருங்கிணைத்து செயல்படுவதால் தான் இந்த சிறப்பு கிடைத்துள்ளது என குறிப்பிட்டார்.

மேலும், கடந்த ஒரு வார காலமாக ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. கடந்த 7,8 மாதங்களாக யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. சீனாவில் இன்னும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. என குறிப்பிட்டார்.

மருத்துவ துறையில் ஏராளாமான விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளன. காசி, வாரணாசியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்திய அளவில் மருத்துவ மாநாடு நடைபெற்றது. மாண்டஸ் புயல் காரணாமாக நம்மால் செல்ல முடியவில்லை. பங்கேற்க அழைத்தார்கள் தமிழகம் சார்பாக மூத்த மருத்துவ அதிகாரி சென்றார். அங்கு மத்திய அமைச்சர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் முறையான மருத்துவம் சென்றவடைவதாக கூறி தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என விருது வழங்கினார்கள் என பெருமையாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment