INDvAUS T20 : ஸ்மித், மேக்ஸ்வெல் உட்பட 6 வீரர்களுக்கு ஓய்வு.! அவர்களுக்கு பதில் இனி இவர்கள்…

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்த கையுடன் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் கடந்த சில நாட்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் இந்தியா – ஆஸ்திரேலிய ஆகிய இரண்டு அணிகளிலும் மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியும், மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. மறுபக்கம், இந்திய மண்ணில் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி இரண்டு சந்தித்து, தற்போது கட்டாய வெற்றி என்ற நிலையில் உள்ளது. இந்த சூழலில் இன்று மூன்றாவது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இதெல்லாம் விளையாட்டில் சகஜம்.! ருதுராஜிடம் மன்னிப்பு கேட்ட ஜெய்ஸ்வால்.!

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். உலகக் கோப்பை வென்ற வேகத்தில் அடுத்த ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியா இந்திய மண்ணில் ஒரு தொடரை இழக்கும். இதனால் இன்றைய போட்டி அனல்பறக்கும் ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து 6 வீரர்களுக்கு ஓய்வளித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் உடனடியாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பங்கேற்றுள்ளதால், வீரர்களின் நலன் கருதியும், தொடர் தோல்வி எதிரொலியாலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவுக்கு எதிரான டி201 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவின் அணியில் இடம்பெற்றிருந்த ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் சீன் அபோட் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வந்தனர்.

ஐபிஎல் அதிரடிகள்.! மும்பை சென்ற ஹர்திக் பாண்டியா..! கேப்டனாக மாறிய சுப்மன் கில்.!

தற்போது, அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மாட், பென் ட்வார்ஷூயிஸ் மற்றும் கிறிஸ் கிரீன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதமுள்ள இந்தியாவுக்கு எதிரான மூன்று டி20  போட்டிகளில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் மேக்ஸ்வெல் மற்றும் ஹெட் இருவரும் விளையாடவில்லை. முதல் போட்டியில் தோல்வி அடைந்ததும் 2வது போட்டிக்கு மேக்ஸ்வெல் வந்தார். இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து இருக்கின்ற காரணத்தினால் ஹெட் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த சூழலில், 6 வீரர்களுக்கு ஓய்வளித்தது அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட ஆஸ்திரேலியா டி20 அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், டிம் டேவிட், பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், கிறிஸ் கிரீன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஜோஷ் பிலிப், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் உள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்