3 முதியவர்களை ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த கொடூரம்…! 8 பேர் மீது வழக்குப்பதிவு…?

விழுப்புரம் ஒட்டனந்தலில் கோவில் திருவிழாவை முன்பே நடத்தியதற்காக, பட்டியல் இனத்தை சேர்ந்த மூன்று முதியவர்களை, ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

இன்றைய நாகரீகமான உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிகள், கல்வி சார்ந்த வளர்ச்சிகள் என பல்வேறு துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், எவ்வளவு முன்னேற்றங்கள் இருந்தாலும், பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் ஒருபுறம் அரங்கேறி தான் வருகிறது.

அந்த வகையில், இன்றும் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான பல கொடுமைகள் பல இடங்களில் அரங்கேறி வருகிறது. விழுப்புரம் ஒட்டனந்தலில் கோவில் திருவிழாவை முன்பே நடத்தியதற்காக, பட்டியல் இனத்தை சேர்ந்த மூன்று முதியவர்களை, ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக 8 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என விழுப்புரம் மாவட்ட எஸ்.பி தகவல் அளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.