தொடங்கியது ஆஷஸ் டெஸ்ட் தொடர்… இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்.!

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியிருக்கிறது. இரு நாட்டு அணியினருக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆஷஸ் தொடருக்காக இரு அணிகளும் பலத்த எதிர்பார்ப்புடன் களமிறங்குகின்றன.

Ashes Match
Ashes Match Image TwitterCricCrazyJohns

இதுவரை நடந்துள்ள ஆஷஸ் தொடர்களில் ஆஸ்திரேலிய அணியே அதிகமுறை (34) வென்று ஆதிக்கம் செலுத்துகிறது, இங்கிலாந்து அணி 32 முறை வென்றுள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி முழு உத்வேகத்துடன் களமிறங்குகிறது. அதேபோல் இங்கிலாந்து அணியும் ‘BazBall’ யுக்தியுடன் பல டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்றுள்ளதால், அதேமுறையுடன் இன்று களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளார். இரு அணிகளின் விவரம் பின்வருமாறு,

இங்கிலாந்து அணி:

பென் டக்கெட், ஜாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (C), ஜானி பேர்ஸ்டோவ் (W), மொயின் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (W), பேட் கம்மின்ஸ் (C), நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட்

author avatar
Muthu Kumar