பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் பாசி பயறு….!!!

  • பாசிப்பயறில் உள்ள நன்மைகளும், அதில் உள்ள மருத்துவ குணங்களும்.

தானிய வகைகள் அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. ஆனால் நாம் இன்று அனைத்தையும் மறந்து, மேலை நாட்டு உணவு முறைகளை தான் கையாண்டு வருகிறோம்.

இன்றைய நாகரீகமாக கருதும், மேலை நாட்டு உணவு முறைகள் நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த நோய்கள் நமது உயிருக்கு உலை வைக்கும் நோயாகவே மாறி விடுகிறது.

பாசி பயறு

இன்று நாம் இந்த பதிவு பாசி பயரின் பயன்கள் பற்றியும் அவற்றின் நன்மைகள் பற்றியும் பாப்போம்.

பாசி பயறில் விட்டமின் பி9 மிகஅதிகளவும், பி1  விட்டமின் பி5  , பி6  , பி2  , விட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன. இதில் தாதுஉப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை மிகஅதிகளவும், மெக்னீசியம், மாங்கனீசு ஆகியவை அதிகளவும் காணப்படுகின்றன.

மேலும் இதில் செலீனியம், கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

உடல் எடை

இன்றைய தலைமுறையினரின் மிக பெரிய பிரச்சனையே உடல் எடை பிரச்னை தான். பாசி பயறு உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.பாசி பயறில் உள்ள புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து பசியை உண்டாக்கும் நொதியான ஹெர்லினின் செயல்பாட்டினை தடைசெய்கிறது.

மேலும் பாசி பயிறு, வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. எனவே பாசி பயறினை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.

செரிமான பிரச்சனைகள்

பாசி பயிரை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமான பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் குடலில் உணவுப்பொருட்கள் நன்கு செரிக்க உதவுகிறது.

மேலும், இது செரிமானப்பாதையில் நல்ல பாக்டீரியாக்களின் செயலினைத் துரிதப்படுத்தி உணவினை நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இப்பயிறில் காணப்படும் கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானம் அடையும் தன்மையைக் கொண்டுள்ளதால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

இரத்த அழுத்தம்

இரத்தம் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து பாசி பயறு நமக்கு விடுதலையை தருகிறது. பாசி பயறில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க  உதவுகிறது.

இப்பயறில் காணப்படும் புரதச்சத்தானது இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடிய என்சைம்களின் செயல்பாடுகளைத் தடைசெய்து, இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது.

இதய பிரச்னை

பாசி பயறில் இதய பிரச்சனைகளை நீக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. பாசி பயறில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் கெட்ட கொழுப்புகள் உடலில் சேருவதைத் தடை செய்கின்றன.

மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமான கேட்ட கொழுப்புகளை கரைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

கர்ப்பிணி பெண்கள்

பாசி பயறு கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாசி பயறில் ஃபோலேட்டுகளை அதிகளவு  உள்ளது. இந்த சத்துக்கள் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு குழந்தையானது குறைபாடுகள் இன்றி பிறக்கவும் வழிவகுக்கிறது.

கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும் இப்பயறில் காணப்படுகின்றன.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

59 mins ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

5 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

5 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

5 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

5 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

6 hours ago