INDvsENG : தொடங்கியது 5-வது டெஸ்ட் போட்டி ..! அறிமுகம் ஆகிறார் படிக்கல் ..!

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடாயேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது தற்போது தர்மசாலாவில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் என்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  இந்திய அணியில் அடுத்த ஒரு புதிய  மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இந்திய அணியின் பேட்ஸ்மேனான ரஜத் படிதாரை இந்த போட்டியில் விடுவித்து அவருக்கு பதிலாக இளம் வீரரான தேவ்தத் படிக்கலை எடுத்த்துள்ளனர்.

Read More  :- IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.!

நடந்து வரும் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களின் விளையாட்டானது பேசும் பொருளாகி உள்ளது. இதற்கு முன் சர்ஃபராஸ் கான், ஆகாஷ் தீப் போன்ற இளம் வீரர்கள் அவர்கள் களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஜொலித்தனர். தற்போது, அந்த வரிசையில் தேவ்தத் படிக்கல் இடம் பெற்றுள்ளார். அவர் ஜொலிப்பாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம். மேலும், கடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக ஓய்விலிருந்த பும்ரா மீண்டும் களமிறங்கி உள்ளார்.

இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றத்தை செய்துள்ளனர். கடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேக பந்து வீச்சாளரான ராபின்சனுக்கு, பதிலாக வேக பந்து வீச்சாளரான மார்க் வுட்டை எடுத்துள்ளனர்.  இந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது இந்திய அணியின் ரவிச்சந்தரன் அஸ்வினுக்கும், இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ்-வுக்கும் சர்வதேச போட்டிகளில் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள முதல் 11 வீரரை கீழே காணலாம்.

Read More  :- சர்ஃப்ராஸ் கான் தந்தை பெயரில் மோசடி ..? வீடியோ வெளியிட்டு விளக்கினார் நௌஷாத் கான் ..!

இந்தியா அணி வீரர்கள் :

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மான் கில், தேவ்தத் படிக்கல், ரவீந்திர ஜடேஜா, சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

இங்கிலாந்து அணி வீரர்கள் :

ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பென் ஃபோக்ஸ்(விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment