தளபதி 66 தெறிக்கவிடும் கூட்டணி…! தெறி படத்தின் இரண்டாம் பாகமா ..??

தளபதி 66 படத்தை இயக்குனர் அட்லீ இயங்குவதாகவும் அது தெறி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல்.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்று கேள்விக்கு பல இயக்குனர்கள் தளபதி 66 படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது தளபதி 66 படத்தை இய்குனார் அட்லீ இயக்கவுள்ளதாகவும் அது கண்டிப்பாக தெறி படத்தின் 2 வது பாகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு ஷாருக்கான் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.