10 காவல் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம்…!

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு, 10 காவல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்துள்ளது.

தமிழகத்தில் ஏப்.6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு, 10 காவல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்துள்ளது.

தேர்தலையொட்டி, 3 ஆண்டுகளாக ஒரே காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள், அவர்கள் மீதான புகார்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களை கண்காணித்து, பணியிடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், தென் மண்டல ஐஜி முருகன் மற்றும் டிஎஸ்பி உதவி ஆணையர்கள் உள்ளிட்ட, 110 காவல் அதிகாரிகளை, தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தென் மண்டல ஐஜி முருகன், சென்னை மதுவிலக்கு கூடுதல் துணை அதிகாரி கோவிந்தராஜ், வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசு, திருச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி கோபாலசந்திரன், சென்னை குற்றப்பிரிவு தலைமையக டிஎஸ்பி வளவன், ராமாநாத புரம் குற்ற ஆவணர் சுபாஷ், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் ஆர். அன்பரசன், எம். வேல்முருகன், ஹெச். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.