‘தடையற தாக்க’ மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘தடம்’ ரிலீஸ் அப்டேட்ஸ்!!!

தடையற தாக்க படம் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி. இந்த படம் நடிகர் அருண் விஜய்க்கும் நல்ல  திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி நடிகர் ஆர்யாவை வைத்து ‘மீகாமன்’ எனும் படத்தை இயக்கி இருந்தார்.

இவர் அடுத்ததாக மீண்டும் அருண் விஜய்யை வைத்து தடம் எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment