விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக் கொள்ள சொல்வது தற்கொலைக்கு சமம் – ஜி.வி.பிரகாஷ்

மக்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்ள செல்வது தற்கொலைக்குச் சமம்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மக்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்ள செல்வது தற்கொலைக்குச் சமம். உரிமைகளுக்காக போராடுவது ஜனநாயகம்தான். அவர்களை ‘ஏர்முனை கடவுள்’ என்று அழைத்தால் மட்டுமே நம்மை படைத்தவனும் மகிழ்வான்.’ என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.