விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்த கமலா ஹரீஸின் மருமகளின் புகைப்படங்கள் எரிப்பு!

விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்து இருந்த அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஷின் மருமகள் மீனா ஹரிஷின் புகைப்படங்கள் டெல்லியில் ஹிந்து முன்னணியினரால் எரிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகிறது. இந்நிலையில் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த போராட்டம் கலவரமாக மாறியது. சில விவசாயிகள் இதனால் போராட்டத்தை கைவிட்டாலும், மீதமுள்ள விவசாயிகளால் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தற்போது பல்வேறு நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆதரவு தெரிவிக்ககூடிய ஒவ்வொருவருக்கும் எதிராக இணையதள பக்கங்களில் தேவையற்ற கருத்துக்களும் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்பாக பாடகி ரிஹானா மற்றும் சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோருக்கு எதிராகவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவர்களின் மருமகள் மீனா ஹரிஷ் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியது என விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் இவரது டுவிட்டுக்கு எதிராக தற்பொழுது டெல்லியில் உள்ள இந்து முன்னணியினர் அவரது புகைப்படங்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதற்கு பதில் அளித்து மீனா ஹரிஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகளுக்கான மனித உரிமைக்கு ஆதரவாக பேசியதற்கு கிடைத்துள்ள பதிலை பாருங்கள் என கூறியுள்ளார்.

author avatar
Rebekal