மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொலைபேசி உதவி எண் – யூஜிசி

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொலைபேசி உதவி எண்ணை பல்கலைக்கழக மானியகுழு அறிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி  வருவதால்,  இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால், 70,827 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

 இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக உதவி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. 

இந்த யுஜிசி பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொலைபேசி உதவி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை யூஜிசி அறிவித்துள்ளது. இவை தவிர யூஜிசியின் இணையபக்கத்திலும் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பல்கலைக்கழக மானியக்குழு, மாணவர்கள், ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.