இனிமேல் ரயில் நிலையங்களில் மண்குவளைகளில் தேநீர்! – பியூஷ் கோயல்

நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக்  கோப்பைகளுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்ட கோப்பைகளில் தான் இனி தேநீர் விற்பனை செய்யப்படும்.

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிஹார் ரயில் நிலையத்தில், வட மேற்கு ரயில்வேயின் கீழ் புதிதாக மின்மயமாக்கப்பட்ட திகாவாரா பாண்டிகுய் பிரிவின் தொடக்க விழாஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், ‘நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக்  கோப்பைகளுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்ட கோப்பைகளில் தான் இனி தேநீர் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், இந்த முயற்சி பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவுக்கு ரயில்வே பங்களிப்பாக இருக்கும் என்றும், நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 400 ரயில் நிலையங்களில் தேநீர் மண்கோப்பைகளில் வழங்கப்படுகிறது என்றும், எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும், மண்கோப்பைகளில் மட்டுமே தேனீர் விற்பனை செய்யப்படும் என்பது எங்களது திட்டம் ஆகும்.’ என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.