TANCET தேர்வு ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

TANCET தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) 2023-க்கான தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, M.E, M.B.A, M.TECH, M.ARCH, M.PLAN ஆகிய படிப்புகளுக்கான TANCET -2023 தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

TANCET -2023 தேர்வு பிப்ரவரி 25, 26-ல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டான்செட் தேர்வுக்கான புதிய தேதி tancet.annauniv.edu என்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) 2023-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களிடமிருந்து மற்றும் எம்.இ./ எம்.டெக். / எம்.ஆர்க். / எம்.திட்டம் ஆகிய படிப்புகளுக்காவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான பட்டப்படிப்புகள் பல்கலைக்கழகத் துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல வளாகங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் (பொறியியல், கலை & அறிவியல் கல்லூரிகள் (தனி நிறுவனங்கள் உட்பட) தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment