எந்தவித தகவலுமின்றி கேரளாவில் இருந்து பேருந்து மூலம் தமிழக எல்லைக்குள் நுழைந்த நபர்கள்.!

பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம்

By manikandan | Published: May 28, 2020 09:41 PM

பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பலர் வந்துள்ளனர். 

அவ்வாறு வந்திறங்கியவர்களை பேருந்து மூலம் தமிழக எல்லையில், கேரள பேருந்து இறக்கிவிட்டு சென்றுள்ளது. இது தொடர்பான எந்தவித முன்னறிவிப்பும் கேரள சார்பில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் மாநில எல்லையில் வந்திறங்கியவர்களை தமிழக அரசு அதிகாரிகள் சோதனைச்சாவடியில் நிறுத்தி, அவர்களில் அனுமதி சீட்டு பெற்றவர்களை மட்டும் அவரவர் வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

அனுமதி பெறாமல் தமிழகம் நுழைய முயன்றவர்களை எல்லையில் உள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் குமரி மாவட்டக்கார்கள் 24 பேரும், மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 14 பேரும்  இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Step2: Place in ads Display sections

unicc